இந்தியா – மொராக்கோ இடையேயான இருதரப்பு உறவுகளையும் கடற்படை ஒத்துழைப்பையிம் வலுப்படுத்தும் ஒரு பகுதியாக, ஐஎன்எஸ் துஷில் கப்பல் 2014 டிசம்பர் 27 அன்று மொராக்கோவின் காசாபிளாங்காவுக்கு சென்றடைந்தது.
மொராக்கோ ஒரு கடல்சார் நாடு். இந்தியாவைப் போலவே ஒரு தனித்துவமான புவியியல் நிலையைக் கொண்டுள்ளது. இந்திய போர்க்கப்பலின் இந்தப் பயணம், இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வழிகளை மேலும் வலுப்படுத்தும். கடந்த 12 மாதங்களில், மூன்று இந்திய கடற்படை கப்பல்கள் தபார், தர்காஷ், சுமேதா ஆகியவை காசாபிளாங்காவுக்கு விஜயம் செய்துள்ளன. இது பரஸ்பர நம்பிக்கையையும் செயல்பாட்டுத் தன்மையையும் கணிசமாக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த இரண்டு நாள் விஜயத்தின் போது, துஷில் குழுவினர், ராயல் மொராக்கோ கடற்படை வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
எஸ்.சதிஸ் சர்மா