தோஹாவில் டிசம்பர் 19-25 தேதிகளில் நடைபெறும் ஆசிய இளைஞர், ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2024-ல் தங்கள் அற்புதமான செயல் திறனுக்குப் பிறகு இந்தியாவின் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் புத்தாண்டில் உயர்ந்த நிலைகளை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, தோஹாவில் இளைஞர், ஜூனியர் பிரிவுகளில் இந்தியா 33 பதக்கங்களை வென்றது.
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு 2026 இவர்களின் அடுத்த இலக்காகும். தோஹாவில் இவர்களது செயல்திறன் இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாக அமைந்துள்ளது.
கத்தாரில் நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் இளையோர், ஜூனியர் நிலைகளில், இந்திய (13-17 வயது) பளுதூக்கும் வீரர்கள் ஏழு தங்கம் உட்பட 21 பதக்கங்களை வென்றனர். ஜூனியர் வீரர்கள் (15-20 வயது) 12 பதக்கங்களை வென்றனர்.
தோஹாவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய 22 பேர் கேலோ இந்தியா வீரர்கள் ஆவார்கள்.
எம்.பிரபாகரன்