தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணை.

தில்லி சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலுடன் பின்வரும் 2 சட்டப்பேரவைத் தொகுதி காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல்களையும் சேர்த்து நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மில்கிபூர் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக இருந்த அவதேஷ் பிரசாத், ராஜினாமா செய்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு தொகுதிகளிலும் 05.02.2025 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான அட்டவணை:

•    தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் தேதி -10.01.2025

•    வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் -17.01.2025

•    வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி – 18.01.2025

•    வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் – 20.01.2025

•    தேர்தல் தேதி – 05.02.2025

•    வாக்கு எண்ணிக்கை தேதி – 08.02.2025

Leave a Reply