ஐஎன்எஸ் துஷில் செனகலின் டாக்கார் பயணத்தை நிறைவு செய்தது.

இந்திய கடற்படையின் ஏவுகணை திறனுடன் கூடிய ஸ்டெல்த் போர்க்கப்பலான ஐஎன்எஸ் துஷில், இந்தியா – செனகல்  நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டின் டாக்கர் துறைமுகத்தில்  தனது முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளது. டாக்கரில் மூன்று நாட்களுக்கு இந்தப் போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலின் கேப்டன் பீட்டர் வர்கீஸ் செனகல் கடற்படையின் தலைமைத் தளபதி ரியர் அட்மிரல் அப்து சேனுடன் இருநாட்டு கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகள் குறித்தும் விவாதித்தார்.

இந்தப் பயணத்தில் இந்திய கடற்படையின் நிஷார் – மித்ரா முனையத்தைக் காட்சிப்படுத்தும் வகையில் அது சார்ந்த நிபுணத்துவம் குறித்த தகவல்களை  பரிமாற்றம் செய்து கொள்ளவும், செனகல், கடற்படை வீரர்களின் யோகா சங்கம் சம்பந்தப்பட்ட கூட்டு யோகா அமர்வு ஆகிய நிகழ்வுகளும் இதில் அடங்கும்.  இந்தப் போர்க் கப்பல் இந்திய புலம் பெயர்ந்தோர் மற்றும் உள்ளூர் சமூகத்திலிருந்து சுமார் 150 பார்வையாளர்களை வரவேற்றது. இது இந்தப் பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் அதிகரித்து வரும் வலிமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

Leave a Reply