நைட்ரஜன் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் புதிய முறை பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவும்!- ஆராய்ச்சியாளர்கள்.

தாவரங்களில் நைட்ரிக் ஆக்சைடு (NO) அளவைக் குறைப்பதன் மூலம் நெல் மற்றும் அரபிடோப்சிஸ் ஆகியவற்றில் நைட்ரஜன், அதன்  பயன்பாட்டுத் திறன் (NUE) ஆகியவற்றை கணிசமாக மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இந்த ஆய்வு சிறந்த, நிலையான, திறமையான விவசாய நடைமுறைகளுக்கு  நம்பிக்கைக்குரிய வழிகாட்டுதலை வழங்குகிறது. இது தாவரங்களில் நைட்ரஜன் ஆக்ஸைடு அளவைக் குறைப்பதற்கான வழி வகைகளைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

நைட்ரஜன் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான தற்போதைய தொழில்நுட்பங்கள் வேளாண் நடைமுறைகளில் முக்கிய கவனம் செலுத்துகின்றன. அதாவது கனிம நைட்ரஜன் உரங்களின் பயன்பாடு, தழைச்சத்து ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதுடன், இத்தகைய நடைமுறைகள் விவசாயிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துவதுடன் பல்வேறு குறைபாடுகளையும் கொண்டுள்ளன. அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்சைடுகள்  உமிழ்வு காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் கனிம உரங்கள் உற்பத்திக் காரணமாக பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்திற்கு அவை பங்களிக்கின்றன

Leave a Reply