பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2025 ஜனவரி 8) புதுதில்லியில் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் திரு முகமது கஸ்ஸான் மௌமூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு, ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை அவர்கள் விரிவாக ஆய்வு செய்தனர். பேச்சுவார்த்தையின்போது, இந்தியா-மாலத்தீவு விரிவான பொருளாதார, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் தொடர்பாக இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை இருவரும் மீண்டும் வலியுறுத்தினர்.
தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்பவும், புதுதில்லியின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ கொள்கைக்கேற்பவும், மாலத்தீவின் திறன்களை மேம்படுத்துவதற்கு பாதுகாப்புத் தளவாடங்களை வழங்குவது உட்பட, பல்வேறு விஷயங்களில் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மீண்டும் உறுதியளித்தார். மாலத்தீவுக்கு உதவுவதில் இந்தியாவின் பங்களிப்பை அந்நாட்டு அமைச்சர் மௌமூன் பாராட்டினார். நவீன உள்கட்டமைப்பு திறன்களை அதிகரிப்பதிலும், பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிப்பதிலும் மாலத்தீவுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சர் மௌமூன் தமது முதல் அதிகாரபூர்வ பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புகளின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.
திவாஹர்