பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இரண்டு வரைவு நெறிமுறைகளையும், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசின் கல்வித் துறையை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
சி.கார்த்திகேயன்