குடியரசுத் தலைவர் மாளிகையை ஜனவரி 21 முதல் 29 வரை பொதுமக்கள் பார்வையிட முடியாது.

எதிர்வரும் குடியரசு தின அணிவகுப்பு, படை பாசறை திரும்புதல் விழா காரணமாக 2025 ஜனவரி 21 முதல் 29 வரை குடியரசுத் தலைவர் மாளிகையை (சர்க்யூட்-1) பொது மக்கள் பார்வையிட முடியாது. 

குடியரசு தின அணிவகுப்பின் ஒத்திகை காரணமாக 2025 ஜனவரி 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாவலர் மாற்றும்  விழாவும் நடைபெறாது.

Leave a Reply