சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சுவாமி விவேகானந்தர் இளைஞர்களுக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கிறார் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இளைஞர்களுக்கு எல்லா காலங்களிலும் அவர் உத்வேகம் அளிக்கிறார். அவர் இளம் மனங்களில் ஆர்வத்தையும் நோக்கத்தையும் தொடர்ந்து தூண்டுகிறார். வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற அவரது கனவை நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”

Leave a Reply