காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சி ஆய்வு செய்தார்.

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்சி, நாட்டில் காதி, கிராமத் தொழில்களின் வளர்ச்சிக்காக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் நடத்தும் திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தலைவர் திரு மனோஜ் குமார், எம்.எஸ்.எம்.இ. செயலாளர்,இணைச் செயலாளர், பொருளாதார ஆலோசகர், ஆணையத்தின்  தலைமைச் செயல் அதிகாரி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் மற்றும்  கிராமத் தொழில்கள் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாட்டில் கதர் கிராமத் தொழில் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அமல்படுத்துவதில் விரிவான கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

Leave a Reply