கடற்படையின் முதன்மையான விமான தளமனா ஐஎன்எஸ் ரஜாளியை பாதுகாப்புத் துறைச் செயலாளர் பார்வையிட்டார்.

பாதுகாப்பு செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் நேற்று (2025 ஜனவரி 13) தமிழ்நாட்டில் அரக்கோணம் அருகே அமைந்துள்ள இந்திய கடற்படையின் முதன்மையான கடற்படை விமான தளமான ஐஎன்எஸ் ராஜாளியை பார்வையிட்டார். அவர் நிலையத்தில் பல்வேறு செயல்பாட்டு வசதிகளை ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்படும் விரிவான செயல்பாடுகள், வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறன் ஆகியவை குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஐஎன்எஸ் ராஜாளியின் அதிநவீன உள்கட்டமைப்பு, கடல்சார் கண்காணிப்பு, போரிடுவதற்கான தயார்நிலை ஆகியவற்றில் அதன் உத்திசார் முக்கியத்துவம் அவருக்கு விளக்கப்பட்டது.

ஐஎன்எஸ் ராஜாளியின், கட்டளை அதிகாரி திரு கபில் மேத்தா, விமான தளத்தின் செயல்பாட்டு தயார்நிலை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதன் பங்கு ஆகியவை குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கினார். திரு ராஜேஷ் குமார் சிங் நிலையத்தில் உள்ள சேவைப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார், தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

Leave a Reply