மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று குஜராத்தின் மான்சாவில் சுமார் ரூ .241 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திரு அமித் ஷா, குஜராத் முதலமைச்சராக திரு நரேந்திர மோடி இருந்தபோது, மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை சவால்களை எதிர்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். குஜராத்தில் நிலத்தடி நீர் ஒரு காலத்தில் 1,200 அடி ஆழத்தில் மட்டுமே கிடைத்தது, ஆனால், நர்மதா திட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா உட்பட குஜராத் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. முதலமைச்சராக பணியாற்றிய திரு நரேந்திர மோடியின் முயற்சிகளால் இது சாத்தியமானது என்று திரு ஷா குறிப்பிட்டார். நர்மதா திட்டத்தைஅனைத்து தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக அமல்படுத்தியதில் திரு. மோடி வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்தார் . திரு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, நர்மதா நதியின் நீர் மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் கிடைத்தது என்று திரு ஷா மேலும் கூறினார். பரூச்சிலிருந்து காவ்டா வரை கால்வாய் அமைப்பதை அவர் உறுதி செய்தார். குஜராத் முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட குளங்களை நிரப்புவது, மழைநீரைச் சேமிப்பது, சவுராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது போன்ற முன்முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
திரு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில், கடனாவிலிருந்து தீசாவுக்கு நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக முயற்சிகளை முன்னெடுத்தார் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். நர்மதா நதி நீரை சுமார் 9,000 குளங்களில் நிரப்புவதற்கு திரு மோடி எவ்வாறு உதவினார் என்பதையும், ஆண்டு முழுவதும் அதன் நீர் ஓட்டத்தை பராமரிக்க சபர்மதி ஆற்றின் குறுக்கே 14 அணைகளைக் கட்டியதையும் அவர் எடுத்துரைத்தார். பிரதமர் மோடியின் முயற்சிகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், வடக்கு குஜராத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்று திரு ஷா கூறினார்.
திவாஹர்