பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று (2025 ஜனவரி 16 ) பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ஜான் ஹீலியுடன் தொலைபேசியில் உரையாடினார். இரு அமைச்சர்களும் தற்போது நிலவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு விஷயங்கள் குறித்து சுருக்கமாகப் பேசியதுடன், இருதரப்பு உறவுகளை உயிர்ப்புடன் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
மின்சார உந்துவிசை சாதனம், ஜெட் என்ஜின்கள் போன்ற முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்ப துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரும், பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஆய்வு செய்தனர். மின்சார உந்துவிசை சாதனம் குறித்த விருப்ப ஆவணம் அண்மையில் கையெழுத்தானது குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
பயிற்சி நிறுவனங்களில் ராணுவ பயிற்றுவிப்பாளர்களை பரிமாறிக் கொள்வது குறித்தும் தற்போது நடைபெற்று வரும் பயிற்சி திட்டங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர். இந்தோ-பசிபிக் மீது இங்கிலாந்தின் கவனம் அதிகரித்துள்ள நிலையில், இரு தரப்பினரும் 2025-ம் ஆண்டில் கூட்டுப் பணி மற்றும் மேம்பட்ட கடல்சார் ஈடுபாடுகளின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வார்கள்.
திவாஹர்