பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காகவும் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காகவும் ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து சென்னைக்கும் சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது, “பொங்கல் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை – மதுரை இடையே மேலும் ஒரு முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் – கழிப்பறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை) ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கே.பி.சுகுமார்