தமிழக அரசு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக சரியாகப் பயன்படுத்தி அரசியல்
கட்சியினருக்கும், பொது மக்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பா.ம.க வினர் மீது
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழக காவல்துறை செயல்படுவதாக செய்திகள்
தெரிவிக்கின்றன. இது நியாயமில்லை.
காவல்துறையினர் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து
சட்டத்திற்கு உட்பட்டு தண்டனை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர
குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது முறையல்ல.
அரசியல் காரணத்திற்காகவோ அல்லது வேறு எக்காரணத்திற்காகவும் குற்றம்
செய்தவர்களை கைது செய்யாமல் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நினைத்தால் அது
சட்டத்திற்கு புறம்பானது.
இந்த வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படுகாயமடைந்து
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு அவர்களுக்கு தீவிர சிகிச்சை
அளித்து குணமடைய தொடர் நடடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதற்கு இச்சம்பவமும்
ஒரு உதாரணம். அரசியல் கட்சியினருக்கும், பொது மக்களுக்குமான பாதுகாப்பு
போதுமானதல்ல. தொடர்ந்து தமிழகத்தில் சமூக விரோதச் செயல்கள் நீடிப்பதற்கு காரணம்
சட்டம் ஒழுங்கில் தமிழக அரசின் கவனமின்மையே.
குறிப்பாக தமிழக அரசு இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும்
கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
தமிழக அரசு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், எந்த அரசியல்
கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தயவு தாட்சனையின்றி, பாகுபாடில்லாமல் அவர்கள்
மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு மாநிலத்தில் இனிமேல்
இது போன்ற எந்த ஒரு வன்முறைச் சம்பவமும் எப்பகுதியிலும் நடைபெறாமல் இருக்க
காவல்துறையினரை முறையாக பயன்படுத்தி அரசியல் கட்சியினருக்கும்,
பொதுமக்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா