இந்திய கடற்படை கப்பல் மும்பை, பன்னாட்டு பயிற்சியான லா பெரூஸ் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான ‘ஐஎன்எஸ் மும்பை’, பன்னாட்டு பயிற்சியான எல்ஏ பெரோஸின்  நான்காவது பதிப்பில்பங்கேற்கிறது. இந்த பதிப்பில் ஆஸ்திரேலிய கடற்படை, பிரெஞ்சு கடற்படை,  அமெரிக்க கடற்படை, இந்தோனேசிய கடற்படை, மலேசிய கடற்படை, சிங்கப்பூர் கடற்படை, கனடா கடற்படை உள்ளிட்ட பல்வேறு கடற்படைகள் பங்கேற்கின்றன.

பயிற்சி, தகவல் பகிர்வு ஆகியவற்றுடன் கடல்சார் கண்காணிப்பு, கடல்சார் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் பொதுவான கடல்சார் சூழ்நிலை விழிப்புணர்வை வளர்ப்பதை இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் கூட்டுக் கடற்படை பயிற்சி ஜனவரி 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான கடல்சார்  ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த கப்பலின் பங்கேற்பு அமைந்துள்ளது.

Leave a Reply