மத்திய அமைச்சர் மனோகர் லால் தலைமையில் மின்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.

மின்சார அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டம் 2025 ஜனவரி 16 அன்று புதுதில்லியில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெற்றது. இதில் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தை (RDSS) செயல்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மத்திய மின்சாரம், புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எரிசக்தி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், எரிசக்தித் துறை செயலாளர் திரு பங்கஜ் அகர்வால், மின்சார அமைச்சகத்தின் இதர அதிகாரிகள், ஆர்இசி லிமிடெட், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் தலைமை அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

நாட்டின் தொழில் வளர்ச்சியலும் பொருளாதார வளர்ச்சியிலும் மின்சாரத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று மத்திய அமைச்சர் திரு மனோகர் லாலகீகினனார். நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் மின் உற்பத்தி செய்யவும், மின் பகிர்மான திறன்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். நாட்டின் ஒவ்வொரு கிராமமும் இப்போது மின்மயமாக்கப்பட்டுள்ளது என்றும், நுகர்வோரின் வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே இப்போது அமைச்சகத்தின் நோக்கம் என்றும் மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் கூறினார்.

கடந்த பத்தாண்டுகளில், நகர்ப்புறங்களில் மின்சாரம் கிடைப்பது 22 மணி நேரத்திலிருந்து 23.4 மணி நேரமாக மேம்பட்டுள்ளது எனவும், அதே நேரத்தில் கிராமப்புறங்களில் இது 12.5 மணி நேரத்திலிருந்து 22.4 மணி நேரமாக கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply