ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் ஏற்பட்ட இறப்புகள் – காரணங்களைக் கண்டறிய அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் கடந்த ஆறு வாரங்களில்  3 சம்பவங்களில் ஏற்பட்ட இறப்புகளுக்கான காரணங்களைக் கண்டறிய பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில் சுகாதார – குடும்ப நல அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ரசாயனம் – உரத் துறை அமைச்சகம்  நீர்வள அமைச்சகம் ஆகியவற்றின் நிபுணர்கள் இருப்பார்கள். மேலும், கால்நடை பராமரிப்பு, உணவு பாதுகாப்பு  தடய அறிவியல் ஆய்வகங்களைச் சேர்ந்த நிபுணர்களும் குழுவுக்கு உதவுவார்கள்.

இந்த குழு ஜனவரி 19-ம் தேதி அங்கு சென்று உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து உடனடி நிவாரணம் வழங்குவதிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் செயலாற்றும்.

நிலைமையை சமாளிக்கவும், இறப்புகளுக்கான காரணிகளைப் புரிந்துகொள்ளவும் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற சில நிறுவனங்களின் நிபுணர்கள் செயலாற்றி வருகின்றனர்.

Leave a Reply