பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு முயற்சிகள் கிராமப்புற இந்தியாவை அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்துவதாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் உள்ளூர் பயனாளிகளுக்கு ஸ்வாமித்வா சொத்து அட்டைகளை விநியோகிக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பல்வேறு துறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் அரசின் தொலைநோக்கு முயற்சிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.
ஸ்வாமித்வா திட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்று அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் இத்திட்டத்தில் 92 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன என்று திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பல்வேறு உள்ளாட்சி அதிகாரிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
திவாஹர்