பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக சட்டப் போராட்டம்: நம்பிக்கை கொடுத்த தவெக தலைவர் விஜய்..!

பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை தனியார் மண்டபத்தில் சந்தித்த தவெக தலைவர் விஜய் சட்டப் போராட்டம் நடத்தி இத்திட்டத்தை தடுக்க தான் என்றும் பாடுபடுவேன் என்று கூறினார். மத்திய, மாநில அரசுகள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறேன். அதே நிலைப்பாட்டை தானே பரந்தூரிலும் எடுக்க வேண்டும். அரிட்டாபட்டி மக்கள் எவ்வாறு நம் மக்களோ, அதே போல பரந்தூர் மக்களும் நம் மக்கள் தானே, அப்படி தானே பார்க்க வேண்டும்.

Leave a Reply