கர்பூரி தாகூர் சமூக நீதியின் காவலராகத் திகழ்ந்தார்!- குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர்.

கர்பூரி தாக்கூர் சமூக நீதியின் காவலராகத் திகழ்ந்தார் என்றும், அவர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி, ஏராளமான மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் கொடுத்தார் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கூறினார்.

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் கர்பூரி தாக்கூரின் 101-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், “இந்தியாவின் மகத்தான ஆளுமை கர்பூரி தாக்கூர் என்றார். குறுகிய காலத்தில் சமூக, அரசியல் மாற்றங்களை அவர் ஏற்படுத்தினார் என்றும் குடியரசு துணைத்தலைவர் கூறினார். 

 சமத்துவத்தின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்த மாமனிதர் கர்பூரி தாக்கூர் என்றும் சாதி, மதம், வர்க்கத்திற்கு அப்பாற்பட்டு, சமத்துவத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சியை ஊக்குவித்தார் என்றும் திரு ஜக்தீப் தன்கர் கூறினார். சமூக நீதியின் தனித்துவமான அடையாளமாக அவர் திகழ்ந்தார் என்றும் குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.

பீகார் ஆளுநர் திரு ஆரிப் முகமது கான், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply