நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் / குளிர்நீர் மீன்வளம் குறித்து மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு.

மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி, இன்று (2025 ஜனவரி 23) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வானவில் வண்ண மீன் / குளிர்நீர் மீன்வளம் குறித்து ஆய்வு செய்தார். அவலாஞ்சியில் உள்ள வானவில் வண்ண மீன் குஞ்சு பொரிப்பகத்தையும், பண்ணை வசதிகளையும் அவர் பார்வையிட்டார். மேலும் இந்தத் துறையில் நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய மாநில அரசின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இமயமலைப் பகுதியிலும் தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளிலும் வானவில் வண்ண மீன் (ரெயின்போ ட்ரௌட்) / குளிர்நீர் மீன்வளம் பெரிய அளவில் உள்ளதாக மத்திய மீன்வளத்துறைச் செயலாளர் கூறினார்.

உற்பத்தி திறனையும், நிலைத்தன்மையையும் மேம்படுத்த உள்நாட்டு மீன் குஞ்சுகளின் பயன்பாடு, மதிப்புச் சங்கிலி இணைப்புகளை மேம்படுத்துதல், சந்தை அணுகலை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். உத்திசார்ந்த அணுகுமுறை குளிர் நீர் மீன்வளத்தை மேம்படுத்தி உள்ளூர் சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி கூறினார்.

இத்துறையின் இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, நாட்டில் குளிர்நீர் மீன்பிடி திறன், சவால்கள், வாய்ப்புகள் குறித்து கருத்து கூறினார்.

Leave a Reply