வேங்கைவயல் விவகாரம்!-தமிழக அரசு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை!- ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக அரசு, வேங்கைவயல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் கலந்த கழிவுநீர்
சம்பந்தமாக மேற்கொண்ட நடவடிக்கை சம்பந்தமாக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்
மக்களுக்கு நம்பிக்கையில்லை.

வேங்கைவயல் பிரச்சனை சம்பந்தமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை
நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தமிழக அரசின் தகவல் உண்மை
நிலையை வெளிக்கொணரவில்லை என்ற செய்திகள் வெளிவந்திருக்கிறது.

குறிப்பாக இப்பிரச்சனை சம்பந்தமாக பல்வேறு மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டுள்ளது.
உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும்.
சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும்.
அதாவது தமிழக அரசு சமுதாயத்தில் இது போன்ற ஒரு பிரச்சனை எழக்கூடாது என்பதற்கு
ஏற்ப விசாரணை நடத்தி, உண்மைக்குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரிய தண்டனை
கிடைக்க வழி வகைச் செய்திருக்க வேண்டும்.

எனவே வேங்கைவயல் தண்ணீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த பிரச்சனை தொடர்பாக
மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உண்மை நிலை வெளிவரவும், குற்றவாளிகள்
தண்டிக்கப்படவும், சமூகநீதி காக்கப்படவும் வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில்
கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன்
தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply