2025-குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 942 பணியாளர்களுக்கு வீரதீர செயல்கள் மற்றும் சேவைப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
அதன் விவரம் வருமாறு:-
தீரச்செயல் பதக்கங்கள்
பதக்கங்களின் பெயர்கள் | வழங்கப்படும் பதக்கங்களின் எண்ணிக்கை |
தீரச்செயல் பதக்கம் | 95* |
* காவல் துறை-78, தீயணைப்புத் துறை-17
வீரதீர செயல்களுக்கான பதக்கம் முறையே உயிர் மற்றும் சொத்துக்களைக் காப்பாற்றுவதில் அல்லது குற்றங்களைத் தடுப்பதில் அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதில் அரிதான, துணிச்சலான செயல் மற்றும் வெளிப்படையான, துணிச்சலான செயல், சம்பந்தப்பட்ட அதிகாரியின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு உரிய மதிப்பளித்து ஏற்படும் ஆபத்தை மதிப்பிடுவதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
வீரதீர செயல்களுக்கான 95 விருதுகளில், பெரும்பான்மையாக இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 28 வீரர்கள், ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்த 28 வீரர்கள், வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த 3 வீரர்கள் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 36 வீரர்கள் ஆகியோருக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.
வீரதீர செயல்களுக்கான பதக்கம்: வீரதீர செயல்களுக்கான 95 பதக்கங்களில், 78 காவல் பணியாளர்களுக்கும், 17 தீயணைப்புத் துறைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சேவை பதக்கங்கள்
சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் (பி.எஸ்.எம்) சேவையில் சிறப்புமிக்க மேன்மை வாய்ந்த பதிவுக்காக வழங்கப்படுகிறது; மெச்சத்தக்க சேவைக்கான பதக்கம் (எம்.எஸ்.எம்) சேவை, கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படுகிறது.
மேன்மை வாய்ந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் 101-ல் 85 போலீஸ் சேவைக்கும், 05 தீயணைப்பு சேவைக்கும், 07 குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் சேவைக்கும், 04 சீர்திருத்த சேவைக்கும் வழங்கப்படுகிறது.
பாராட்டத்தக்க பணிக்கான 746 பதக்கங்களில், காவல் பணிக்கு 634 பதக்கங்களும், தீயணைப்புத் துறைக்கு 37 பதக்கங்களும், குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் பணிக்கு 39 பதக்கங்களும், சீர்திருத்தப் பணிக்கு 36 பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
சேவை வாரியாக வழங்கப்பட்ட பதக்கங்களின் விவரம்
பதக்கத்தின் பெயர் | போலீஸ் சேவை | தீயணைப்பு சேவை | குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் சேவை | சீர்திருத்தப் பணி | மொத்தம் |
சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம்(வழங்கப்பட்ட மொத்தப் பதக்கம்: 101) | 85 | 05 | 07 | 04 | 101 |
பாராட்டத்தக்க பணிக்கான பதக்கம்(வழங்கப்பட்ட மொத்தப் பதக்கம்: 746) | 634 | 37 | 39 | 36 | 746 |
எம்.பிரபாகரன்