மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் 11-வது கேட்டு ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க 2025 ஜனவரி 27, 28 தேதிகளில் ஓமனில் ஓமன் செல்கிறார். அந்நாட்டு வர்த்தக, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கைஸ் பின் முகமது பின் மூசா அல்-யூசுப் உடன் இணைந்து கூட்டு ஆணையக் கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார். 2023-2024-ம் ஆண்டில் 8.94 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான இருதரப்பு வர்த்தகத்துடன் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் நமது முக்கிய வர்த்தக கூட்டு நாடுகளில் ஒன்றாக ஓமன் இடம்பெற்றுள்ளது.
அமைச்சரின் இந்த பயணத்தின் போது, இரு அமைச்சர்களும் வர்த்தகம், முதலீடு, உலகளாவிய பொருளாதார நிலைமை ஆகியவை குறித்து விரிவான விவாதங்களை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-ஓமன் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இந்த பயணத்தின் போது மேலும் உத்வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரும் வர்த்தக ரீதியாக முக்கியமான, சமமான, பரஸ்பர நன்மை பயக்கும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (ஃபிக்கி), ஓமன் வர்த்தக தொழில் சபை ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சருடன் வர்த்தக தூதுக்குழுவும் ஓமனுக்குச் செல்கிறது.
திவாஹர்