2025 குடியரசு தின கொண்டாட்டங்களின் காட்சிகளை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அம்சத்தின் துடிப்பான காட்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அற்புதமான அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்தையும் ராணுவ வலிமையை வெளிப்படுத்தியது என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“2025 குடியரசு தின கொண்டாட்டங்களின் சில காட்சிகள்…
வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்குத் துடிப்பான காட்சி. பிரமாண்டமான அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்தையும் ராணுவ வலிமையையும் வெளிப்படுத்தியது. துடிப்பான அலங்கார ஊர்திகள் நமது மாநிலங்களின் வளமான பாரம்பரியத்தைப் பிரதிபலித்தன.
“இது உண்மையிலேயே கடமைப் பாதையில் ஒரு மறக்க முடியாத காலையாக அமைந்தது…”
திவாஹர்