2025 ஜனவரி 27 அன்று மாலை 4:30 மணியளவில் தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு (பரேட்) மைதானத்தில் நடைபெறும் வருடாந்திர தேசிய மாணவர் படை (என்சிசி) பிரதமர் அணிவகுப்பில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
இந்த ஆண்டு குடியரசு தின முகாமில் 917 மாணவிகள் உட்பட மொத்தம் 2361 தேசிய மாணவர் படையினர் பங்கேற்றனர். என்சிசி அணிவகுப்பில் இந்த என்சிசி-யினர் பங்கேற்பது, புதுதில்லியில் ஒரு மாத காலம் நடைபெற்ற என்சிசி குடியரசு தின முகாம் 2025, வெற்றிகரமாக நிறைவடைவதைக் குறிப்பதாக அமையும். இந்த ஆண்டு பிரதமரின் என்சிசி அணிவகுப்பின் கருப்பொருள் ‘இளைஞர் சக்தி, வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்பதாகும்.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தேசிய மாணவர் படையினரின் (என்சிசி) உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் 800-க்கும் என்சிசி-யினரின் கலாச்சார நிகழ்ச்சி இதில் நடைபெறும். 18 நட்பு நாடுகளைச் சேர்ந்த 144 இளம் மாணவர் படை வீரர்களும் இதில் பங்கேற்பது இந்த ஆண்டு பேரணிக்கு உத்வேகம் சேர்க்கும்.
நாடு முழுவதிலுமிருந்து 650-க்கும் மை பாரத் (மேரா யுவ பாரத்) தன்னார்வலர்கள், கல்வி அமைச்சகம், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக இந்த என்சிசி அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர்.
திவாஹர்