இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான தென் கிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் மிகைச் சுமை நீக்கம் 281 மில்லியன் கன மீட்டரை (ஏப்ரல் 2024 முதல் இன்று வரை) கடந்துள்ளது. அதன் விகித சார்பு இலக்கில் 105%ஐ அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 19.82 மில்லியன் கன மீட்டர் (7.58%) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
“பல்வேறு சவால்கள் இருந்தபோதும், எங்களின் அர்ப்பணிப்பு முயற்சிகள் மிகைப்பணி சுமை நீக்க இலக்கை அடைய உதவுவது மட்டுமின்றி, அதை விஞ்சவும், தென் கிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் பயணத்தில் புதிய வரையறைகளை அமைக்கவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரேம் சாகர் மிஸ்ரா தெரிவித்தார்.
மேலும், தென் கிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்தியுள்ளது. 2024-ம் ஆண்டில் மட்டும், கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு 880-க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது இந்நிறுவனத்தின் சமூக மேம்பாடு மற்றும் நலனுக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
எஸ்.சதிஸ் சர்மா