பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை நிறைந்த இந்தியாவின் சுற்றுலாத் துறை, உலகளாவிய விருப்பமாகவும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாகவும் வளர்ந்து வருகிறது. வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சிக்கான அதன் திறனை அங்கீகரித்து, 2025-26 மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, பயண வசதிகளை மேம்படுத்த ரூ.2541.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதன்மை முயற்சியாக மாநிலங்களுடன் இணைந்து 50 சிறந்த சுற்றுலா தலங்களை ஒரு சவால் முறையில் உருவாக்குவது, உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் இணைப்பை உறுதி செய்வது ஆகியவை பட்ஜெட்டில் அடங்கும். உறுதிப் பாட்டுடன் கூடிய முயற்சிகளுடன், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி யடைந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கை களில் சுற்றுலாத் துறையும் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2023-ம் நிதியாண்டில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு, தொற்றுநோய் கால கட்டத்திற்கு முந்தைய 5 சதவீதத்தை மீண்டும் அடைந்தது. சுற்றுலாத் துறையானது 2023-ம் நிதியாண்டில் 7.6 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. 2023-ம் ஆண்டில் இந்தியாவிற்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை தொற்றுநோய்க்கு முந்தைய நிலை போல் மீண்டும் அதிகரித்தது. சர்வதேச சுற்றுலா பயணிகளின் உலக அளவிலான எண்ணிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு 2023-ம் ஆண்டில் 1.45 சதவீதமாக இருந்தது.
திவாஹர்