ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி சிகரெட்டுகளுடன் 2 சந்தேகநபர்கள் மெதவச்சியில் இலங்கை கடற்படையால் கைது.

2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி, இலங்கை கடற்படை, ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து, மெதவச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், இரண்டு (02) சந்தேகநபர்கள், மூன்று (03) கிராம் முந்நூற்று எழுபது (370) மில்லிகிராம் ஐஸ் மற்றும் நானூறு (400) போலியான சிகரட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பண்டுகபய நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், 2025 பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி மெதவச்சி ஊழல் தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மெதவச்சி, இகிரியகொல்லேவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபரொருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு, குறித்த நபரின் உடமையில் விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த சுமார் மூன்று கிராம் (03) மற்றும் முந்நூற்று எழுபது (370) மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Methamphetamine) சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் அன்றைய தினம் இலங்கை கடற்படை கப்பல் பண்டுகபய நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் செட்டிகுளம் மற்றும் மடுகந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மெதவச்சி நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அங்கு, அந்த நபரிடம் விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட நானூறு (400) போலி சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 30 வயதுடைய மெதவச்சி, இகிரிகொல்லேவ மற்றும் கரப்பிக்கடை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிகரெட்டுகடகளுடன் மெதவச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave a Reply