பாதுகாப்பு செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், இங்கிலாந்து பாதுகாப்புத்துறை இணையமைச்சர் லார்ட் வெர்னான் கோக்கருடன் இருதரப்பு ஆலோசனை நடத்தினார். பெங்களூருவில் நடைபெறும் 15-வது ஏரோ இந்தியா கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. தற்போதைய நிலையிலான பாதுகாப்பு , மற்றும் தொழில்துறையில் ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் துறையில் இருதரப்பினரும் இணைந்து பணியாற்றுவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
முன்னதாக, லார்ட் கோக்கர் மற்றும் இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதர் திருமதி லிண்டி கேமரூன் பங்கேற்ற இங்கிலாந்து-இந்தியா வர்த்தக சபை வட்டமேசைக் கூட்டத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் தலைமை தாங்கினார். இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து பாதுகாப்பு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டு வரும் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியத் தொழில்துறையைச் சேர்ந்த இந்தியப் பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள், சங்கத்தினர் மற்றும் இங்கிலாந்து பாதுகாப்புத் தொழில்துறையினர் இதில் பங்கேற்றனர்.
மேலும், இத்தாலியின் பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் திரு. மேட்டியோ பெரெகோ டி கிரெம்னாகோவுடன் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் இருதரப்பு ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் கடல்சார், வான்வழி, பாதுகாப்பு பயிற்சிகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
எஸ்.சதிஸ் சர்மா