ஒருங்கிணைந்த சுகாதார தீர்வுகளுக்கு யுனானி மருத்துவத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் சர்வதேச மாநாட்டை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்.

யுனானி தினமான இன்று ஒருங்கிணைந்த சுகாதார தீர்வுகளுக்கு யுனானி மருத்துவத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் என்ற சர்வதேச மாநாட்டை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், ஹக்கீம் அஜ்மல் கானை நினைவுகூரும் தருணமாக இது உள்ளது என்றும், அவரை கௌரவிக்கும் வகையில், 2016-ம் ஆண்டு முதல் அவரது பிறந்த தினம் யுனானி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் கூறினார். ஹக்கீம் அஜ்மல் கான் இந்தியாவில் யுனானி மருத்துவ முறையைப் பரவச் செய்ததோடு பல புதுமைக் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியுள்ளார். அவரது முயற்சியால் யுனானி மருத்துவ முறை இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், யுனானி முறையில் மருந்து உற்பத்தி போன்றவற்றில் இந்தியா தற்போது உலக அளவில் முன்னணியில் இருப்பதாகக் குடியரசுத்தலைவர் கூறினார். யுனானி அமைப்புடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள், பயிற்சியாளர்கள் நவீன முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் பயனுள்ள அம்சங்களை ஏற்றுக்கொள்வதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் யுனானி மருத்துவம், ஆயுஷ், பாரம்பரிய மருத்துவத்திற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்றவற்றின் ஆதார அடிப்படையிலான சமீபத்திய ஆராய்ச்சிப் போக்குகள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் போன்ற தற்போதைய தலைப்புகள் விவாதிக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுகாதாரத் துறையில் நமது நாடு முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். பல்வேறு மருத்துவ முறைகளுக்கு உரிய மதிப்பளிக்கப்பட்டு வலுவூட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Leave a Reply