இந்திய எரிசக்தி வாரம் 2025, எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவிலான பங்கேற்பாளர்கள், கண்காட்சியாளர்களின் பங்கேற்புடன் வெற்றியடைந்ததாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பசுமை எரிசக்தி, உயிரி எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வு எதிர்பார்ப்புகளை விஞ்சி குறிப்பிடத்தக்க வகையில் புதுமையான முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்குள், இந்தியா எரிசக்தி வாரம் உலகின் இரண்டாவது பெரிய எரிசக்தி தளமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்றும், அதன் நான்காவது பதிப்பு கோவாவில் நடைபெற உள்ளது என்றும் திரு பூரி தெரிவித்தார்.
இந்திய எரிசக்தி வாரம் 2025, வெறும் ஒரு கட்டமைப்பு தளமாக இல்லாமல், உண்மையான வணிக பரிவர்த்தனைகளை எளிதாக்குவதன் மூலம், மற்ற உலகளாவிய எரிசக்தி மன்றங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். எச்பிசிஎல் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட செலவு குறைந்த மாற்றல் கருவி போன்ற நடைமுறை கண்டுபிடிப்புகளை திரு ஹர்தீப் சிங் பூரி சுட்டிக்காட்டினார். இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை செயல்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் கோயம்புத்தூர் மற்றும் நுகர்வோர் ஒன்றிணைவதில் அமைச்சர் திருப்தி தெரிவித்தார், குறிப்பாக நெகிழ்வான எரிபொருள் வாகனங்களின் காட்சிப்படுத்தலில் இது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியா-அமெரிக்க எரிசக்தி ஒத்துழைப்பு குறித்துப் பேசுகையில், இருதரப்பு உறவுகளில், குறிப்பாக இயற்கை எரிவாயு துறையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இயற்கை எரிவாயு நுகர்வை தற்போது 6% இலிருந்து 15% ஆக உயர்த்துவதற்கான இந்தியாவின் குறிக்கோளை அமைச்சர் எடுத்துரைத்தார், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகங்களுக்கான அமெரிக்காவுடனான உறவின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
திவாஹர்