ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்.

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் திருமதி. நிதி கரே மற்றும் ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி, எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகள் குறித்தும் தவறான வகையில் விளம்பரம் செய்யப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தேர்வுகள் குறித்து தவறான விளம்பரம் செய்த பல்வேறு பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இதுவரை 46 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. 24 பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ.77 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. மேலும் தவறான விளம்பரங்களை நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply