சர்வதேச வாழும் கலை மகளிர் மாநாட்டின் தொடக்க அமர்வில் குடியரசுத்தலைவர் கலந்துகொண்டார்.

பெங்களூரில் இன்று (பிப்ரவரி 14, 2025) நடைபெற்ற வாழும் கலை அமைப்பின் சர்வதேச மகளிர் மாநாட்டின் தொடக்க அமர்வில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்தியாவின் பெண்கள் சக்தி ஆர்வமாக சாதித்து வருவதாகவும் தங்களின் பங்களிப்பில்  உயர்ந்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார். அது அறிவியல், விளையாட்டு, அரசியல், கலை அல்லது கலாச்சாரம் என எத்துறையாக இருந்தாலும், நமது சகோதரிகளும், மகள்களும் தலை நிமிர்ந்து முன்னேறி வருகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் நாட்டைப் பெருமைப்படுத்துகிறார்கள். மன வலிமை இல்லாமல் தடைகளை உடைத்து சவால்களை சந்திக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் தைரியத்தை சேகரிக்கவும், பெரிய கனவுகளைக் காணவும், தனது கனவுகளை அடைய தனது முழு பலத்தையும், ஆற்றலையும் பயன்படுத்தவும் வேண்டுமென அவர் வலியுறுத்தினார். ஒவ்வொருவரும் தங்கள் இலக்கை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு சிறிய அடியும் வளர்ந்த இந்தியாவை நோக்கிய ஒரு படியாகும் என்று அவர் கூறினார்.

தொழில்நுட்பங்களின் இடையூறு யுகத்தில் நாம் இருக்கிறோம் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சில வழிகளில் நமக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை அளித்துள்ளன. இத்தகைய போட்டி நிறைந்த உலகில், நமது மனித மதிப்புகள் அப்படியே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உண்மையில், ஒவ்வொரு மனிதனும் கருணை, அன்பு மற்றும் ஒற்றுமை போன்ற மனித மதிப்புகளை மேம்படுத்துவதற்கு கூடுதல் முயற்சியை உணர்வுபூர்வமாக மேற்கொள்ள வேண்டும். இங்குதான் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகிறது. கருணையின் மூலம் வழிநடத்தும் சிறப்புத் திறன் பெண்களுக்கு உண்டு. தனிநபரைத் தாண்டிப் பார்த்து, குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் உலக அளவில் உறவுகளின் நல்வாழ்வுக்காக பாடுபடும் திறன் அவர்களிடம் உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து பெண்களும், தங்கள் வாழ்க்கையையும், தங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் மிகவும் அழகாகவும், அமைதியாகவும் மாற்றுவதற்குப் பயன்படுத்தக்கூடிய ஆன்மீகக் கொள்கைகளை கடைபிடிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்வித் துறையில் வாழும் கலை பல முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். நமது குழந்தைகளின் கல்வியை விட மனிதகுலத்தில் பெரிய முதலீடு எதுவும் இல்லை என்று அவர் கூறினார். சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், பல குழந்தைகள் நமது நாட்டின் பயணத்தில் தீவிர பங்கேற்பாளர்களாக மாற முடியும் என்று கூறிய அவர்,  பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களைச் சமாளிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து நீங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply