இந்திய ராணுவத்தின் ராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், 2025 பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் மணிப்பூருக்கு பயணம் செய்து இந்தியா-மியான்மர் எல்லையில் நிலைமையைப் பற்றிய விரிவான புரிதலையும் மாநிலத்தில் நடந்து வரும் எல்லை உள்கட்டமைப்பு மேம்பாடுகளின் நிலை குறித்த கருத்துகளையும் பெற்றார்.
அவர் தனது பயணத்தின்போது, மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் குமார் பல்லா, மாநில பாதுகாப்பு ஆலோசகர், மணிப்பூர் தலைமைச் செயலாளர், மணிப்பூர் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரைச் சந்தித்தார். இம்மாநிலத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமையை இயல்பாக்குவது, குறிப்பாக எல்லை நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதி நெடுகிலும் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.
லெப்டினன்ட் ஜெனரல் கய் வருகை, மணிப்பூர் மக்களின் நலனையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையிலான கூட்டு அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது.
திவாஹர்