பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் பொதுமக்களிடம்!…
தமிழகத்தில் செல்வந்தர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி ஒன்று நிலை மாற வேண்டும் என்று சம கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கத்தை நேற்று ஆரம்பித்து இன்று தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் இது தொடங்கப்பட வேண்டும் என்று முடிவு எடுத்து அனைத்து இடங்களிலும் திட்டமிடப்பட்டது தென் சென்னையின் சார்பில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பக்கத்தில் கையெழுத்து இயக்கத்தை நாங்கள் தொடங்க இருந்தோம் அமைதியான முறையில் எந்த ஆர்ப்பாட்டமும் கோஷமோ இல்லாமல் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தோம் அந்த நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கே குவிக்கப்பட்டு கையெழுத்து வாங்க கூடாது என்று தடுத்தார்கள் நாங்கள் அமைதியாக தானே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னோம் இல்லை அதற்கு வாங்குவதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி சுமார் 30 40 போலீஸ் அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டு என்னை எதுவும் செய்ய விடாமல் என்னை நகரக்கூட விடாமல் கடும் வெயிலில் மூன்று மணி நேரம் நான் கையெழுத்து வாங்காமல் போகமாட்டேன் என்று தீவிரமாக நின்று அதற்கு பின்பு கையெழுத்தை வாங்கிவிட்டு வந்தோம் அவர்கள் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்று சொன்னார்கள் அங்கு ஆர்ப்பாட்டமும் பேரணியோ பொதுக்கூட்டமோ நடைபெறவில்லை அமைதியாக ஒரு அரசியல் தலைவர் பொதுமக்களை சந்திப்பதை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என்று கேட்டேன் அதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி என்னை கைது செய்யாமல் என்னை நகரவும் விடாமல் மூன்று மணி நேரம் போலீசார் சுற்றுவளைத்து நின்று கொண்டே இருந்தார்கள் நானும் அவர்களுக்கு அடிபணியாமல் இது எனது உரிமை பொதுமக்களை பார்ப்பதை தடுக்க முடியாது என்று போராடி பின்பு கையெழுத்தை வாங்கினோம் இந்த நடவடிக்கையில் இருந்து தமிழக அரசு பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை பார்த்து பயந்து இருக்கிறது என்றும் போலீசார் சுற்றி வளைத்த பின்பும் கூட பொதுமக்கள் ஆர்வமாக வந்து கையெழுத்து போட்டதை பார்த்து பாமர மக்களுக்கு சம கல்வி கிடைக்க வேண்டும் என்ற எங்களது கொள்கை வெற்றி பெற்றதாகவே நான் நினைக்கிறேன் எங்களது கையெழுத்து இயக்கம் தொடரும் ஒரு கோடி கையெழுத்து நிச்சயமாக பெறுவோம் அடக்குமுறை எங்களை அடக்க முடியாது ஏனென்றால் நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம்.
இவ்வாறு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்