திருச்சியில் பிஐஎஸ் சார்பில் பொற்கொல்லர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்.

இந்திய தரநிலைகள் அமைவனத்தின் சார்பில் திருச்சியில் பொற்கொல்லர்களுக்கு  இரண்டு நாள் பயிற்சித் திட்டம் நடத்தப்பட்டது.

மதுரை பிஐஎஸ்-ன் மூத்த இயக்குநரும் தலைவருமான திரு எஸ்.டி. தயானந்த் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியின் நோக்கங்களை எடுத்துரைத்தார். இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் நகை தயாரிப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பொற்கொல்லர்கள் தரம் குறித்து தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

திருச்சி பொற்கொல்லர்கள் சங்கத்தின் தலைவர் திரு எஸ். ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். மதுரை பிஐஎஸ்-இன் இணை இயக்குநர் திருமதி ஹேமலதா பணிக்கர்,  ஹால்மார்க்கிங் திட்டம், ஹால்மார்க்கிங் பதிவுக்கான நடைமுறை, நகைக்கடைக்காரர்களுக்கு பதிவு வழங்குவதற்கான கொள்கை ஆகியவை குறித்து விளக்கினார்.

தங்கத்தை சுத்திகரிக்கும் செயல்முறை குறித்து கோல்ட்ஸ்மித் அகாடமி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் திரு திருப்பதி ராஜன் விளக்கினார். மேலும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தங்கத்தை சுத்திகரிக்கும் செயல்முறையை நேரடியாக செய்து காட்டினார். இந்த சுத்திகரிப்பு செயல்முறை, தங்க நகைகளை தயாரிப்பதில் தூய்மையை உறுதிப்படுத்த உதவும் என்று அவர் தெரிவித்தார்.

இறுதியில் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் 56 பொற்கொல்லர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Leave a Reply