இந்திய கடற்படையின் பயிற்சிப் படைப்பிரிவின் தாய்லாந்து பயணம் நிறைவு.

இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் சுஜாதா, ஐஎன்எஸ் ஷர்துல் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் வீரா ஆகிய முதல் பயிற்சி படைப்பிரிவு, தாய்லாந்தின் ராயல் தாய் கடற்படையுடன் மேற்கொண்ட ஒருங்கிணைந்த பயிற்சி கடந்த நான்காம் தேதியுடன் நிறைவு பெற்றது. இரு தரப்புக்கும் இடையே தொழில்முறை பரிமாற்றம் மற்றும் கடற்படை இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

பிராந்திய பாதுகாப்பு, கூட்டுப் பயிற்சிக்கான வாய்ப்புகள் மற்றும் இருதரப்பு நல்லெண்ண நடவடிக்கைகள் குறித்து கடற்படை உயர் அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல்களும் நடைபெற்றன.

இருதரப்பினருக்கும் இடையே ஒருங்கிணைந்த யோகா பயிற்சி மற்றும் நட்பு ரீதியான விளையாட்டு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தியத் தூதரகம் மற்றும் மூத்த அதிகாரி இணைந்து வழங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் ராயல் தாய் கடற்படையின் மூத்த தலைவர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply