இந்தியாவின் உற்பத்திச் சூழல், சாலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையும் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. இந்தக் கூட்டாண்மையானது ஸ்டார்ட் அப் தொழில்துறையினர், புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உள்கட்டமைப்பு, வழிகாட்டுதல், நிதி வாய்ப்புகள், சந்தை இணைப்புகளை வழங்கும் கட்டமைக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வகுக்கப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர் திரு சஞ்சீவ், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது நாட்டின் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு உத்திசார் நடவடிக்கை எனக் கூறினார். இந்த ஒத்துழைப்பு தொழில்துறை-கல்வித்துறை இணைப்புகளை வலுப்படுத்தும் என்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான சூழலை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திரு சந்தோஷ் ஐயர் இந்த ஒப்பந்தம் சிறப்பானது எனக் குறிப்பிட்டார். இது சாலைப் பாதுகாப்பு சுற்றுச்சூழல், நிலைத்தன்மை, உற்பத்தி மேமபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திவாஹர்