தமிழக அரசு, திருத்தணி அருகே லாரியும் அரசுப்பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில்
உயிரிழந்தவர்களுக்கு அறிவித்த நிவாரணத் தொகை போதுமானதல்ல
தமிழக அரசு, கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும்
திருத்தணி அருகே லாரியும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்
4 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தத்துக்குரியது.
மேலும் 28 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது .
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை
போதுமானதல்ல. இன்னும் கூடுதலான தொகையை நிவாரணமாக வழங்க தமிழக அரசு
அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து அவர்கள் விரைவில் குணமடைய தொடர் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்