இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியின் 12வது பதிப்பு KHANJAR-XII கிர்கிஸ்தானில் மார்ச் 10 முதல் 23 மார்ச் 2025 வரை நடைபெற உள்ளது. 2011-ல் அதன் தொடக்கத்திலிருந்து, இது ஒரு வருடாந்திர பயிற்சி நிகழ்வாக உருவெடுத்துள்ளது. இந்தியாவுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையே உள்ள மாற்று இடங்கள், வளர்ந்து வரும் உறவின் தனித்துவமான பரிமாணத்தை பிரதிபலிக்கின்றன. இதே பயிற்சியின் கடைசி பதிப்பு ஜனவரி 2024 இல் இந்தியாவில் நடத்தப்பட்டது.
இந்தியக் குழுவானது பாராசூட் படைப்பிரிவின் (சிறப்புப் படைகள்) துருப்புக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. கிர்கிஸ்தான் படையணி கிர்கிஸ்தான் ஸ்கார்பியன் படையினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
இந்த பயிற்சியின் நோக்கம், நகர்ப்புற மற்றும் மலைகள் நிறைந்த உயரமான நிலப்பரப்புகளில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சிறப்புப் படை நடவடிக்கைகளில் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொள்வதாகும். மேம்பட்ட சிறப்புப் படைகளின் திறன்களை வளர்ப்பதிலும் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும்.
கடுமையான பயிற்சிக்கு அப்பால், கிர்கிஸ் பண்டிகையான நவ்ரூஸின் கொண்டாட்டம் உட்பட துடிப்பான கலாச்சார பரிமாற்றங்கள் இந்த பயிற்சியில் இடம்பெறும். இந்தத் தொடர்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும்.
சர்வதேச பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் பற்றிய பொதுவான கவலைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில் இரு தரப்புக்கும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்தப் பயிற்சி வழங்கும். இந்தப் பயிற்சியானது பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வளர்ப்பதில் இந்தியா மற்றும் கிர்கிஸ்தானின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
எஸ்.சதிஸ் சர்மா