குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மார்ச் 10 முதல் 12 வரை ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கும் சண்டிகர் யூனியன் பிரதேசத்துக்கும் செல்கிறார்.
மார்ச் 10 ஆம் தேதி, ஹிசாரில் உள்ள குரு ஜம்பேஷ்வர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். அதே நாளில், ஹிசாரில் பிரம்மா குமாரிகளின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது, ‘முழுமையான நல்வாழ்வுக்கான ஆன்மீகக் கல்வி’ என்னும் மாநில அளவிலான பிரச்சாரத்தைத் தொடங்குவார்.
மார்ச் 11 ஆம் தேதி, பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், பதிண்டா மற்றும் எய்ம்ஸ், பதிண்டா ஆகியவற்றின் பட்டமளிப்பு விழாக்களில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். அன்று மாலை, மொஹாலியில் பஞ்சாப் அரசு சார்பில் வழங்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்வார்.
மார்ச் 12 அன்று, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
திவாஹர்