மொரீஷியஸ் குடியரசு அதிபர் தரம்பீர் கோகுலை அரசு மாளிகையில் பிரதமர் நரேந்திர மோதி இன்று சந்தித்தார்.

இந்தியா-மொரீஷியஸ் இடையே சிறப்பான மற்றும் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறும் மக்களுக்கு இடையே வலுவான இணைப்புகளும் இருப்பதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

மொரீஷியஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் இரண்டாவது முறையாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது தமக்கு கிடைத்த கௌரவம் என்று பிரதமர் குறிப்பிட்டார். சிறப்பு அடையாளமாக, குடியரசுத் தலைவர் கோகுல் மற்றும் அவரது மனைவி  விருந்தா கோகுல் ஆகியோருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற அடையாள அட்டைகளைப் பிரதமர் வழங்கினார். இந்திய அரசின் ஒத்துழைப்புடன் அரசு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேததா தோட்டத்தையும் பிரதமர் பார்வையிட்டார். ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத்தின் பலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவின் முக்கிய பங்குதாரராக மொரீஷியஸ் திகழ்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைக்குப் பின், பிரதமரை கௌரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் கோகுல் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

மொரீஷியஸ் குடியரசு அதிபர் திரு தரம்பீர் கோகுலை அரசு மாளிகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

Leave a Reply