2024 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது.

2024 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில்  நிலக்கரி இறக்குமதி 183.42  மில்லியன் டன்னாக  இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 200.19 மில்லியன் டன் நிலக்கரி அளவோடு  ஒப்பிடும் போது 8.4 சதவீதம் குறைவாகும்.  இதன் மூலம் நாட்டிற்கு சுமார் 5.43 பில்லியன் (ரூ.42,315.7 கோடி) அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை நீங்கலாக முறைப்படுத்தப்படாத துறையின் நிலக்கரி இறக்குமதியும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 12.01 சதவீதம் குறைந்துள்ளது. வணிக ரீதியான நிலக்கரி சுரங்கம் தோண்டுதல், நிலக்கரியை வெப்பமாக்குதல் போன்ற பல நடவடிக்கைகளால்  உள்ளூர் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, இறக்குமதிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 2024 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் நிலக்கரி உற்பத்தி சென்ற ஆண்டின் இதே காலத்தை விட 6.11 சதவீதம்  அதிகரித்துள்ளது.

Leave a Reply