மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகள் 2012 ஆம் ஆண்டின் தேசிய மருந்து விலைக் கொள்கையின் மூலம் வகுக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய கொள்கையின் கீழ் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முக்கிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன . தேசிய மருந்து விலைக் கொள்கையின்படி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையமானது உச்சவரம்பு விலையை நிர்ணயிக்கிறது.
ஒருங்கிணைந்த மருந்து தரவுத்தள மேலாண்மை அமைப்பு என்பது தேவைப்படும் மருந்துகள் தொடர்பான சந்தை அடிப்படையிலான தரவுகளை சேகரிப்பதற்கான ஒரு இயங்குமுறையாகும். இது தேவையான வருமானம்/அறிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க உதவுகிறது. அதன் தற்போதைய பதிப்பு(ஐ.பி.டி.எம்.எஸ்.2.0) உச்சவரம்பு விலைகள் மற்றும் சில்லறை விலைகள் பற்றிய தகவல்களைக் காட்டுகிறது. அனைத்து பங்குதாரர்களின் தகவல்கள் சேர்க்கப்பட்டு இந்தத் தரவு அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது.மருந்துகள்(விலை கட்டுப்பாடு)ஆணை, 2013 இன்படி மருந்து தயாரிப்பாளர் விலைப்பட்டியலை டீலர்களுக்கு வழங்க வேண்டும். சில்லறை விற்பனையாளர் மற்றும் டீலர் தமது மருந்துக் கடையில் இந்தப் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
நுகர்வோர் நலன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்காக ஃபார்மா சகி தாம்(பி.எஸ்.டி.) என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படட்டு உள்ளது. இந்த செயலியை தரவிறக்கம் செய்து பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலி மருந்துகளின் பிராண்ட் பெயர், மருந்து சேர்க்கை பொருட்கள், உச்ச வரம்பு விலை, அதிகபட்ச சில்லறை விலை ஆகியவற்றை காட்டும்.
இந்தத் தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
திவாஹர்