கப்பல் படைக்கான ஐந்து ஆதரவு கப்பல்கள் அணியில் இரண்டாவது கப்பலின் கட்டும் பணியின் தொடக்க நிகழ்ச்சி 2025 மார்ச் 12 அன்று காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில், போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கொள்முதல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் ராஜாராம் சுவாமிநாதன், இந்தியக் கடற்படை, இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம், எல் அண்ட் டி ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்தியக் கடற்படை ஆகஸ்ட் 2023 -ல் ஐந்து கடற்படை ஆதரவு கப்பல்களைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து கையெழுத்திட்டது. இந்த ஆதரவு அணி கப்பல்கள் விநியோகம் 2027-ம் ஆண்டு நடுப்பகுதியில் தொடங்குகிறது. பொதுத்துறை-தனியார் பங்களிப்பின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில், நாட்டின் கப்பல் கட்டும் திறனை திறம்பட பயன்படுத்தவும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கப்பல்கள் கட்டி கையளிக்கப்படவும் காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்திற்கு இரண்டு ஆதரவு கப்பலின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஆதரவுக் கப்பல்கள் கடற்படை சேவையில் சேர்க்கப்பட்டவுடன், கடலில் உள்ள கடற்படைக் கப்பல்களுக்கு உதவுவதன் மூலம், இந்திய கடற்படையின் திறன்களை வலுப்படுத்தும். 40,000 டன்களுக்கும் அதிகமான இடப்பெயர்ச்சியைக் கொண்ட இந்தக் கப்பல்கள், எரிபொருள், நீர், வெடிமருந்துகள் மற்றும் சேமிப்புகளை கடலில் நீண்டகால நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்லும். இதனால் கடற்படையின் அணுகல் மற்றும் இயக்கம் அதிகரிக்கும். இந்த கப்பல்களில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பணியாளர்களை கொண்டு செல்வதற்கும் இயற்கை பேரழிவுகளின் போது நிவாரணப் பொருட்களை விரைவாக கொண்டு சென்று வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும்.
முற்றிலும் உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெரும்பாலான உபகரணங்களை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்படும்இந்தத் திட்டம் இந்திய கப்பல் கட்டும் தொழிலை ஊக்குவிக்கும். மேலும் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் உலகிற்காக தயாரிப்போம் ஆகியவற்றில் மத்திய அரசின் முயற்சிகளுடன் ஒத்திசைந்ததாக இந்த கப்பல்கள் கட்டும் பணி உள்ளது.
திவாஹர்