சாலை, ரயில்வே மற்றும் மெட்ரோ துறைகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளர் திரு பங்கஜ் குமார் தலைமையில் நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 89-வது கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்துக்கு ஒத்திசைவானதாக பல்முனைய இணைப்பு மற்றும் போக்குவரத்து செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எட்டு திட்டங்களை (நான்கு சாலை, மூன்று ரயில்வே மற்றும் ஒரு மெட்ரோ திட்டங்கள்) திட்டமிடுதல் குழு மதிப்பீடு செய்தது. இந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளால் பயண நேரங்கள் குறையும், போக்குவரத்து செயல்திறன் மேம்படும் மற்றும் பிராந்தியக்கிடையில் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார பலன்கள் கிடைக்கும் கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சார்பில், மேகாலயாவில் தரகிரி முதல் டாலு பிரிவு வரை இருவழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், கோஹ்பூர் மற்றும் நுமாலிகர் இடையே அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே நான்கு வழி சுரங்கப்பாதை கட்டுமானம், அசாம் மாநிலத்தில் கலியபோர்-நுமாலிகர் பிரிவில் தற்போதுள்ள இரண்டு வழிப்பாதையை, நான்கு வழிச்சலையாக மேம்படுத்தும் திட்டம், ராஜஸ்தான் மாநிலத்தில் மயிலார் முதல் ஜெய்சால்மர் வரை இருவழி புறவழிச்சாலை திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன.
ரயில்வே அமைச்சகம் சார்பில், மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூர்-கர்ஜத் இடையே மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதை விரிவாக்கம், ஒடிசாவில் நெர்குன்டி முதல் கட்டாக் வரை 4-வது நான்காவது பாதையின் கட்டுமானம், ஹரிதாஸ்பூர் முதல் பாரதீப் வரை இரட்டை வழித்தடம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
எம்.பிரபாகரன்