ஜெனீவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 353-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 353-வது நிர்வாக க் குழு கூட்டம் சுவிட்சர்லாந்தின்ஜெனீவாவில் 2025 மார்ச் 10ம் தேதி முதல் மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முத்தரப்பு அங்கத்தினர்களான அரசுகள், தொழிலாளர் அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து, வேலை வாய்ப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆளுகை ஆகியவை தொடர்பான முக்கியமான அம்சங்களை விவாதிக்கிறது.

இந்தியா சார்பில் மத்திய அரசின் தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையிலான குழுவினர் இதில் பங்கேற்றுள்ளனர். தொழிலாளர் நலன், சமூக நீதி, தரமான வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை உலக அளவில் மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் செயல்பாடுகளை அவர்கள் இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கின்றனர்.

சமூக வளர்ச்சியை நோக்கிய 2030-ம்  ஆண்டுக்கான செயல்திட்டத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த ஆண்டு இறுதியில் கத்தார் தலைநகர் தோஹாவில் ஐநா தலைமையில் சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு இந்தியா தனது ஆதரவை வழங்கியுள்ளது. சமூக நீதியையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதில் இந்தியாவின் எழுச்சியூட்டும் முன்னேற்றம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) தலைமை இயக்குநர் திரு கில்பர்ட் எஃப் ஹவுங்போவை சந்தித்த திருமதி சுமிதா தவ்ரா, சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணி என்ற முன்னோடி திட்டத்திற்காக வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்தியாவின் சமூக பாதுகாப்பு பாதுகாப்பு குறித்து மிகவும் துல்லியமான மதிப்பீட்டைப் பெற ஐஎல்ஓ-வுடன் இணைந்து மாநில தரவு சேகரிப்பு நடைமுறையை இந்தியா தொடங்கியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சமூக நீதிக்கான வரவிருக்கும் வருடாந்திர மன்றக் கூட்டத்தில் முனைப்புடன் பங்கேற்கவும், பொறுப்பான வணிக நடத்தை, வாழ்வாதார ஊதியம் வழங்குதல், சமூக ரீதியாக நியாயமான வேலைக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தொழில்துறையின் சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துமாறு திரு ஹவுங்போ இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார்.

வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியங்களை தீர்மானித்தல், இணைய வழி செயலி அடிப்படையிலான பணியாளர்களான கிக் தொழிலாளர்கள், நடைபாதைத் தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்கள், முன்னுரிமைகள் குறித்து ஐஎல்ஓ-வுடன் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து இந்தியத் தரப்பில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply