போட்டிச் சட்டத்தின் பொருளாதாரம் குறித்த 10-வது தேசிய மாநாட்டை இந்திய போட்டி ஆணையம் நடத்தியது! – மத்திய இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா பங்கேற்பு.

போட்டிச் சட்டத்தின் பொருளாதாரம் குறித்த 10-வது தேசிய மாநாட்டை இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) புதுதில்லியில் இன்று ஏற்பாடு செய்திருந்தது. மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா மாநாட்டில் முக்கிய விருந்தினராகப் இருந்தார். இந்திய போட்டி ஆணையத்தின் தலைவர் திருமதி ரவ்னீத் கவுர் மாநாட்டின் தொடக்க அமர்வில் சிறப்புரையாற்றினார். போட்டிச் சட்டத்தின் பொருளாதாரத் துறையில் பணிபுரியும் அறிஞர்கள்பயிற்சியாளர்கள்நிபுணர்களை ஒன்றிணைக்கும் இந்த மாநாடு2016 முதல் ஒவ்வொரு ஆண்டும் சிசிஐ-யால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

மத்திய இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா தமது உரையில்இந்தியப் பொருளாதாரத்தின் உயர் வளர்ச்சிப் பாதையை எடுத்துரைத்தார்.  நியாயமான போட்டிசந்தைகளில் சமமான வாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் போட்டிச் சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

 நிறுவனங்களின் முறைகேடான நடத்தைகளைத் தடுப்பதில் பயனுள்ள பங்களிப்பை வழங்குவதற்காக சிசிஐ-க்கு அவர் பாராட்டு தெரிவித்தார். நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவுகளுக்காக ஆணையத்தைப் பாராட்டிய அவர்நிகழ்நேர சந்தை கண்காணிப்புஒழுங்குமுறைக்கான கூட்டு அணுகுமுறையின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

நியாயமான போட்டி வர்த்தகங்களுக்கும்நுகர்வோருக்கும் பயனளிக்கும் வகையிலும்ஆற்றல்மிக்கதுடிப்பான சந்தைகளுக்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்குவதே கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் சந்தை வலிமையைச் சார்ந்துள்ளது எனவும் இது நியாயமான போட்டியைச் சார்ந்துள்ளது என்றும் இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறினார்.

இந்திய போட்டி ஆணையத்தின் தலைவர் திருமதி ரவ்னீத் கவுர் தமது சிறப்பு உரையில்அதிகரித்து வரும் சிக்கலான சந்தைகள் தொடர்பாக உருவாகி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆற்றல்மிக்க அணுகுமுறையை பின்பற்றி வருவதாகக் கூறினார். போட்டியுடன் புதுமையை சமநிலைப்படுத்துவதும்போட்டியும் தொழில்நுட்ப முன்னேற்றமும் இணைந்த திறந்த சந்தைகளை உறுதி செய்வதும் இலக்கு என்று அவர் கூறினார்.

Leave a Reply